- ‘வீரம்’ தேவிஸ்ரீபிரசாத்
சமீபத்தில் திரைக்கு வந்து மாஸ் ஹிட்டடித்த அஜித்தின் ‘வீரம்’ பட இசையமைப்பாளர் தன் அப்படம் குறித்த அனுபவங்களைப் பற்றி பேசும்போது....
''நான் இசையமைச்சதுலயே அதிகம் கஷ்டப்பட்டு பயந்து போட்டது அஜித்சாருக்கு, ஏனா நடையால ,ஒரே ஒரு பார்வையால ஏதாவது ஒரே வார்த்தையில தியேட்டர அதிரவைக்கிற அந்த FIRE ரஜினி சார்க்கு அப்பறம் அஜித் சார்க்குதான் இருக்கு. அவருக்கு BGM சாதரணமா போட முடியாது. நம்மலால எவ்வளவு மாஸா போட முடியுமோ அத போட்டாதான் அவர் ரசிகர்கள் அத கொஞ்சமாவது ஏத்துபாங்க. அதனால சார் வர ஒவ்வொரு சீனுக்கும் பயந்துகிட்டே இது நல்லா வருமானு கஷ்டப்பட்டு போட்டேன் ,
அதுவும் அந்த ரயில் சண்டைக்கு , சார் உயிர பணையம் வச்சு ஈசியா பண்ணிட்டு போயிட்டாரு ஆனா நான் என்னடா சார் யாருமே எடுக்காத ரிஸ்க் எடுத்திருக்கார் BGM சொதப்பிட்டா வெளியில தலைகாட்டமுடியாதேனு பயந்தே போட்டேன். நான் பிண்ணனி இசைக்கு அதிக நாள் எடுத்துகிட்டது வீரம் படத்துக்குதான் . அஜித் சாரோட RECENT படங்கள் எல்லாமே BGM பட்டைய கிளப்பிருக்கும் வேற, வீரம் ரிலீஸ் முதல் நாள் இரவுகூட வீட்டுல மங்காத்தா போட்டுபார்த்தேன் . அதுல பிண்ணனி இசை மிரட்டிருக்கும் . இதையெல்லாம் பார்த்த தல ரசிகர்கள் நம்ம இசையை ஏத்துப்பாங்களானு பயம் வந்துடுச்சு.
ஆனா வீரம் படம் தியேட்டர்ல பாக்குறப்ப அஜித்சார் வர சீன்ஸ்லாம் விசில் பறக்குறப்பதான் நம்ம இசையும் நல்லா வந்துடுச்சுனு சந்தோஷப்பட்டேன் !''என்றார்.
No comments:
Post a Comment