‘க்ளாடியேட்டர்’ படத்திலிருந்து ஆக்ஷன் காட்சிகள், ‘டைட்டானிக்’ படத்திலிருந்து காதல் காட்சிகள்,
‘2012’ படத்திலிருந்து இயற்கை பேரழிவுக் காட்சிகள்
ஆகியவற்றை ஒன்றுசேர்த்து பக்காவாக ஒரு கதையை உருவாக்கினால் அதுவே ‘பாம்பய்’ திரைப்படம். 3டியில் வெளிவந்திருக்கும் இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு
ஈர்த்துள்ளது?
கிபி 62ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் ரோமானியர்களால் ஒரு தனிப்பட்ட இனம்
முழுமையாக அழிக்கப்படுகிறது. அந்த இனத்தில் மிஞ்சும் ஒரேயொருவனான ‘மிலோ’ (கிட் ஹாரிங்டன்) அடிமையாக
வளர்க்கப்பட்டு மிகப்பெரிய ‘க்ளாடியேட்டர்’ வீரனாக உருவாகுகிறான். ரோமானியர்களால் புதிதாக உருவாக்கப்படும் ‘பாம்பய்’ நகரின் விழா கொண்டாட்டத்திற்காக
அடிமைகள் அனைவரும் அந்த நகருக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.
அங்கே வரும் நாயகன் மிலோவுக்கும் ‘பாம்பய்’ நகரை உருவாக்கிய தலைமை நிர்வாகியின்
மகள் கேஸியாவுக்கும் (எமிலி ப்ரெளிங்) காதல் மலர்கிறது. ஆனால் ரோமானிய செனட்டரும்
கேஸியாவை அடைய நினைக்கிறான். அடிமைகளுக்கும் ரோமானியர்களுக்கும் நடக்கும் ஒரு
மிகப்பெரிய மோதலின்போது, ‘பாம்பய்’ நகரின் தூரத்தில் இருக்கும் எரிமலை ஒன்று வெடிச்சிதற, மொத்த நகரமும் கலவர பூமியாகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதை
தியேட்டரில் காண்க.
பலம்
* நாயகன் நாயகிக்கிடையே மலரும் காதல்
காட்சிகள்.
* இடைவேளைக்கு முன்பு வரும் அடிமை
வீரர்களின் சண்டைக் காட்சியும் அதை படமாக்கிய விதமும்.
* ‘பாம்பய்’ நகரின் அற்புதமான செட்டிங்ஸ், எரிமலைச் சீற்றத்தின் கிராபிக்ஸ் காட்சிகள், உறுத்தாத 3டி!
* அற்புதமான ஒளிப்பதிவு, கச்சிதமான எடிட்டிங், பிரம்மாண்டமான பின்னணி இசை.
பலவீனம்
* ஏற்கெனவே பார்த்த பல படங்களை
நினைவுபடுத்தும் கதை. அடுத்தடுத்து என்ன நடக்கும் என எளிதில் யூகிக்கக்கூடிய திரைக்கதை.
* தொடர்ந்து 20 நிமிடங்களாக எரிமலை வெடித்துக் கொண்டேயிருப்பது பெரிய சலிப்பை
ஏற்படுத்துகிறது.
* தமிழ்ப் படங்களுக்கு சவால்விடும்
அளவுக்கு ‘லாஜிக்’ ஓட்டைகள் நிரம்பியிருப்பது.
மொத்தத்தில்...
இவ்வளவு பெரிய உழைப்பை ஒரு புதிய
கதைகளத்துக்கு கொட்டியிருந்தால் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹாலிவுட் படங்களின்
பட்டியலில் ‘பாம்பய்’க்கும் இடம் கிடைத்திருக்கும்.
ஒரு வரி பஞ்ச் : பிரம்மிப்பு குறைவான
பிரம்மாண்டம்!
Rating : 2.5 / 5
தயாரிப்பு : ஃபிலிம் டிஸ்ட்ரிக்ட்
இயக்கம் : பால் டபிள்யூ.எஸ்.ஆன்டர்சன்
நடிப்பு : கிட் ஹாரிங்டன், கேரி அன்னே மோஸ், எமிலி ப்ரௌனிங், அக்பஜே
ஒளிப்பதிவு : க்ளென் மேக்ஃபெர்சன்
இசை : கிளிண்டன் ஷார்ட்டர்
No comments:
Post a Comment