Pages

Sunday, February 23, 2014

இந்தவார கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

இந்த வாரம் வெள்ளிக்கிழமை ‘பிரம்மன்’, ‘ஆஹா கல்யாணம்’, ‘வெண்மேகம்’, ‘சித்திரைத்திங்கள்’, ‘மனைவி அமைவதெல்லாம் என 5 படங்கள் ரிலீஸ். ஆனால் 5 படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. சரி இந்தவாரம் எந்தெந்த படங்கள் எந்த இடத்தில் இருக்கிறதென்று பார்க்கலாம்.

5வது இடம் : கோலிசோடா


2014ஆம் ஆண்டு வெளியான படங்களிலேயே ‘அதிக லாபம் தந்த படம்’ என  அனைத்து தரப்புகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படம் ‘சூப்பர்ஹிட்’ படமாக இன்னும்  ஓடிக்கொண்டிருக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 12 கோடிகளுக்கும்மேல்  வசூல் செய்திருப்பதால் சிறிய பட்ஜெட் சினிமாவிற்கு புது ரத்தம் பாய்ச்சியுள்ளது இப்படம்.

4வது இடம் : ‘பண்ணையாரும் பத்மினியும்’



விஜய்சேதுபதிக்காகவே நல்ல ஓபனிங் கிடைத்தது இப்படத்திற்கு. விமர்சனரீதியாக  பலரிடமும் இப்படம் பாராட்டுப் பெற்றிருந்தாலும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை  என்பதும் உண்மைதான். ஆனால் முதலுக்கு மோசமில்லை என்ற ரகத்தில் இப்படம்  இருக்கிறது.

3வது இடம் : ‘இது கதிர்வேலன் காதல்’


‘ஓகே ஓகே’ கூட்டணியின் மெகாஹிட்டால் இப்படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்தது.  கிட்டத்தட்ட தமிழகத்தில் மட்டுமே 320 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இப்படம்  இருவிதமான விமர்சனங்களால் தற்போது கொஞ்சம் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.  ஆனாலும், வசூலில் திருப்திகரமாகவே உள்ளதாக விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்.

2வது இடம் : ‘ஆஹா கல்யாணம்’


‘யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ்’ பேனரால் பெரிதும் கவனிக்கப்பட்ட இப்படம் ‘ஆவரேஜ்’ ரகம்தான்.  இதனுடன் வெளியான ‘பிரம்மன்’ மிகப்பெரிய விமர்சனத்திற்குள்ளானதால் ரசிகர்களின் ப £ர்வை தற்போது இந்தப்படத்தின் மீது திரும்பி இருக்கிறது.

முதல் இடம் : ‘பிரம்மன்’


இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் முதல் இடமா? என படம் பார்த்தவர்களுக்கு பெரிய  அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. சசிகுமாரின் முந்தைய படங்களின்  வெற்றி, பி மற்றும் சி சென்டர்களில் அவருக்கிருக்கும் வரவேற்பு என இப்படத்திற்கு ஒது க்கப்பட்ட தியேட்டர்களும் காட்சிகளும் அதிகம். அந்த அடிப்படையிலேயே இப்படம் தற்பே £து முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால், அடுத்த வாரம் இந்தப் படம் முதல் ஐந்து  இடங்களுக்குள் வருமா என்பதே சந்தேகம்தான்!

No comments:

Post a Comment