Pages

Thursday, December 18, 2014

பொங்கலுக்கு போட்டியிடும் 5 படங்கள்... எது வரும்? எது பின்வாங்கும்?


வரும் பொங்கலுக்கு ஐ, என்னை அறிந்தால், ஆம்பள, கொம்பன்,  காக்கி சட்டை ஆகிய 5 படங்கள் தங்களின் ரிலீஸை அறிவித்திருக்கின்றன. இப்போதிருக்கும் சூழலில் கண்டிப்பாக இத்தனை படங்கள் வெளியாக சாத்தியமேயில்லை. அதிலும் குறிப்பாக ‘ஐ’யும், ‘என்னை அறிந்தாலு’ம் ஒரே நேரத்தில் வெளியாக கண்டிப்பாக சாத்தியமில்லை.


இது ஒருபுறமிருக்க இன்னும் மேற்கண்ட படங்களில் சில படங்களின் ஷூட்டிங் முடியவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தின் கடைசி கட்ட ஷூட்டிங் தற்போது தரமணியில் நடைபெறுகிறது. இது முடிய எப்படியும் 22ஆம் தேதி ஆகிவிடும். அதன் பிறகு பாடல்களை வெளியிட்டு, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்களை முடித்து, படத்தை சென்சாருக்கு அனுப்பி என நினைத்துப் பார்த்தால் கண்ணைக் கட்டுகிறது. எங்களுக்கு கிடைத்த தகவலின்படி ‘என்னை அறிந்தால்’ பொங்கலுக்கு வெளியாவது சந்தேகம்தான்.

‘ஐ’யும் தற்போது ஒரு சில காட்சிகளை ரகசியமாக மீண்டும் எடுத்து வருகிறார்களாம். காரணம், அர்னால்டுக்கு படத்தின் சில காட்சிகளை போட்டுக் காட்டியபோது அவர், ஒரு சில காட்சிகளை ஹாலிவுட் படங்களில் தான் ஏற்கெனவே பார்த்திருப்பதாகக் கூறினாராம். அதனால் தற்போது அந்த காட்சிகளை மாற்றி எடுத்து வருகிறார்களாம். ஆனாலும் திட்டமிட்டபடி பொங்கலுக்கு ‘ஐ’ ரிலீஸாவது உறுதி என்கிறார்கள்.

‘ஆம்பள’ தற்போது 2 பாடல்களின் ஷூட்டிங்கிற்காக இத்தாலி செல்லவிருக்கிறது. வரும் கிறிஸ்துமஸ் அன்று பாடல்களை வெளியிடவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து சென்சாருக்கு செல்கிறது. படம் பொங்கலுக்கு வெளியாவது 100% உறுதி.

‘காக்கி  சட்டை’யைப் பொறுத்தவரை ஏதாவது ஒரு பெரிய படம் வெளியேறினால் களமிறங்குவது என்ற முடிவில் இருக்கிறது. அதனால் கடைசி நேரத்தில் இப்படம் பின்வாங்கும் என்கிறார்கள்.

கார்த்தியின் ‘கொம்பன்’ படம் பொங்கல் ரிலீஸ் என்று அறிவித்திருந்தாலும் இன்னும் சில நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருக்கிறது. எனவே இந்த அறிவிப்பு வெறும் விளம்பரம்தான் என்கிறார்கள். பிப்ரவரியில் வெளியிடத்தான் திட்டமாம்.

ஆக, ஐ, ஆம்பள இந்த இரண்டு படங்கள் மட்டுமே இப்போதைக்கு பொங்கல் ரிலீஸுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளன.

Pongal Release 2015, Tamil Movies, I, Yennai Arindhaal, Ambala, Komban, Kakki Sattai, Ajith, Shankar, Vikram, Karthi, Vishal, Sivakarthikeyan

Monday, December 1, 2014

Vijay 58 Actress Sridevi Latest Hot Photos











Vijay 58 | Age 40 | But young as his journey 22 forever.



He faced more problems and worst criticisms. bad jokes about his physique and appearances. He would have cried as the words pierced him through the way. But nothing broke his passion, nothing stopped him from walking on the paths of thorns and bushes. He walked and walked and after 22 years, he is the emperor of box office making even those Bollywood superstars wonder of his magical entertainer persona.

Hats off to you Vijay for completing 22 years of film journey

  

Sunday, November 30, 2014

நண்பர்கள் ஸ்ரீகாந்தும் ஷாமும் இப்போது எதிரிகளாகி விட்டார்கள்!- பரத் பேச்சு

நண்பர்களான ஸ்ரீகாந்தும் ஷாமும்  இப்போது எதிரிகளாகி விட்டார்கள் என்று 'நட்சத்திர பேட்மிண்டன் லீக்' அறிமுக விழாவில் பரத் பேசினார்.இது பற்றிய விவரம் வருமாறு:


நட்சத்திர கிரிக்கெட்டைப் போலவே அடுத்து பிரபலமாக  இருக்கிறது நட்சத்திர பேட்மிண்டன். க்ரீன் க்ரூப் ஆப் கம்பெனியின் ஏற்பாட்டில் SBL எனப்படும் 'ஸ்டார் பேட்மிண்டன் லீக்'( Star’s Badminton League) சென்னையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. 

இதன் அறிமுகவிழா சென்னை போரம் விஜயா மாலில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் பிரபல பின்னணிப் பாடகர்கள் பாடல்களைப் பாடினார்கள். நடன இயக்குநர் அமைப்பில் நடனக் கலைஞர்கள் நடனம் ஆடினர்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் ஸ்டார் பேட்மிண்டன் லீக்கில் கலந்து கொள்ளப் போகும் அணிகள் அறிமுகப் படுத்தப் பட்டன.

'சென்னை ஃப்ளிக்கர்ஸ்' (Chennai Flickers )   அணியின் தலைவரும், உரிமையாளருமான  ஸ்ரீகாந்த்,  'என் ப்ரண்டப் போல யாரு மச்சான் 'பாடலைப் பாடி ஆரம்பித்தார். 

தொடர்ந்து  ஸ்ரீகாந்த் பேசும் போது ''இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் கணேஷ் தான் ஒரு செயல்வீரர் என்று நிரூபித்து இருக்கிறார்.  இன்று மதத்துக்குப் பிறகு எல்லாராலும் பேசப் படுவது விளையாட்டுதான் .எல்லாரையும் இணைப்பதும் விளையாட்டுதான். கிரிக்கெட் வளர்ந்து விட்ட இந்தச் சூழலில் பேட்மிண்டனுக்கு முக்கியத்துவம் தரும் இம் முயற்சி வரவேற்புக்குரியது.

இது ஒரு ஆரம்பம்தான். பெரிய கட்டடத்துக்கான முதல் செங்கல் இன்று எடுத்துவைக்கப் பட்டிருக்கிறது. இது பெரிதாக வரும்; வளரும். மற்ற அணியின் தலைவர்கள் பரத், ஷாம் எல்லாரும் என் நண்பர்கள்தான். ஆனாலும் இது சரியான போட்டியாக இருக்கும்.நட்சத்திரங்களை வைத்து ஸ்டார் நைட் போன்ற விழாக்கள் வைப்பதை விட்டுவிட்டு இப்படி விளையாட்டு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி செய்வதை நிச்சயம் பாராட்ட வேண்டும்."என்றார்.

அடுத்த அணியான 'சென்னை ஸ்மாஷர்ஸ்'(Chennai  Smashers) உரிமையாளரான நடிகர் பரத் பேசும் போது

"கிரிக்கெட் எனக்குப் புதுசில்லை. ஐந்து ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடி வருகிறேன். இதில் எனக்கு அணித்தலைவர் பொறுப்பு தந்ததற்கு நன்றி. என்னுடன் மோதும் ஷாம், ஸ்ரீகாந்த் இருவருமே எனக்கு சகோதரர் போன்றவர்கள். நண்பர்கள் போன்றவர்கள். இப்போது எதிரிகளாகி விட்டார்கள். ஆனால் எங்களுக்குள் போட்டி இருக்கும்;வேறுவழியில்லை ஆரோக்கியமான போட்டி இருக்கும். . " என்றார். 

முன்றாவது அணியான 'சென்னை ராக்கெட்ஸ்'  (Chennai Racquets) அணியைச் சேர்ந்த ஷாம் பேசும் போது  

'
முதலில் இப்படிப்பட்ட முயற்சியில் இறங்கியுள்ள கணேஷுக்கு நன்றி. பாராட்டுகள். இவர் இதற்கு முன் ஸ்டார் கிரிக்கெட் நடத்தினார்.  சின்னத்திரை நட்சத்திரங்களையும் வெள்ளித்திரை நட்சத்திரங்களையும் கிரிக்கெட்டில் மோதவிட்டார். பாண்டிச்சேரியில் நடத்திய அந்தப் போட்டியில் நான் கலந்து கொண்டேன். பிரமாண்டமாக  நடத்தினார். பிரமாதமாக வெற்றியும் பெற்றார். ஒரு சாரிட்டிக்காக அதில் வசூலானதை எங்கள் முன்பாக அதே மேடையிலேயே கொடுத்தார். அப்படிப்பட்ட நல்ல இதயம் உள்ளவர் அழைத்ததால் மூன்று பேருமே மறுக்காமல் ஒப்புக் கொண்டோம். ஏதோ நடித்தோம் போனோம் என்ற இல்லாமல் நாமும் நல்ல விஷயங்களில் ஈடுபட வேண்டும் நல்ல விஷயங்களில் இடம் பெற வேண்டும் என்று  நான் உடனே ஒப்புக் கொண்டேன். இதில் ஆடும் எங்களுக்குள் ஈகோ, பொறாமை எல்லாம் கிடையாது மகிழ்ச்சியுடன் கலந்து கொள்கிறோம். இதில் விளையாடும் போது வயது குறைந்த உணர்வு, எங்களுக்குள் இருக்கிற சிறு பையனை வெளிக் கொண்டு வரும் உணர்வு வருகிறது. " என்றார்.

தங்கள் அணிகளின் பெயர்கள் பற்றிக் கூறும் போது ''பேட்மிண்டனில் படார் என்று அடிப்பது 'பிளிக்' . ஜெயிக்கபோவது பிளிக்கர்ஸ்தான் "என்றார் ஸ்ரீகாந்த் .

''என்னதான் ராக் கெட் வைத்து ப்ளிக் அடித்தாலும் கடைசியில் ஸ்மாஷ் அடித்தால் தான் சூப்பர் "என்றார் பரத்.

'' ராக்கெட் இல்லாமல் ப்ளிக்கோ, ஸ்மாஷோ அடிக்க முடியாது. ராக்கெட் இல்லாமல் பேட்மிண்டனே இல்லை'' என்றார் ஷாம்.

நிகழ்ச்சியில் சுற்றிலும் குழுமியிருந்த பார்வையாளர்கள் மத்தியில் ஒவ்வொரு அணியின் டிஷர்ட்டும் வண்ணமய ஒளியுடன் ஒலியும் அதிர அறிமுகம் செய்யப் பட்டது. அணியின் டி ஷர்ட்டை அமைப்பாளர் கணேஷ் அறிமுகம் செய்தார்.

இந்நிகழ்ச்சியின் முன்னோடிகளாக விளங்கும் நடிகை அனுராதா, அவரது மகள் அபிநயஸ்ரீ மட்டுமல்ல நடிகர்கள் பானுசந்தர் ,பவர்ஸ்டார்,அசோக்,ப்ருத்வி ,கிரண்,முன்னா, அருண், சரண், தருண், பிளேடு சங்கர்,  ஆரி, சூரி, பாபா பாஸ்கர் மாஸ்டர், நடிகைகள் நிரோஷா,ஜெனிபர், மணிஷா, ஸ்வாதி, அலீஷா அப்துல்லா, சஞ்சனா, ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்ரி, யாஷ்மித், சாரா ,பாடகர்கள் நவின், க்ரிஷ் ஐயர் ,இசையமைப்பாளர்கள் நிவாஸ் பிரசன்னா, தரண்குமார் ஆகியோரும் மேடையில் தோன்றி அணிகளை  ஊக்கமூட்டினர்: 
நிறைவாக ரோஜா கணேஷ் நன்றி கூறினார்.   

இந்த ஸ்டார் பேட்மிண்டன் லீக் 2015 ஜனவரியில்  சென்னை போரம் விஜயா மாலில் நடைபெறவுள்ளது.

Telugu Actress Madhurima Photos

Naaigal Jaakirathai success meet photos


    

    

    










Naaigal Jakkirathai, Sibiraj, Satyaraj, Arundhathi, Nathampal Films, Idoh, Dog Movie, Dog Oriented Movie, Doggy Style

கோச்சடையானால் தலைவலி ஆரம்பமானது!

ரஜினிகாந்த் மனைவி லதா மீது 10 கோடி ரூபாய் மோசடி வழக்கு! 


பொதுவாகவே ரஜினி படங்கள் சரியாக ஓடவில்லை என்றால், ரஜினியிடம் வந்து முறையிட்டு தங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை விநியோகஸ்தர்கள் கறாராக வசூலித்துக் கொள்வார்கள். வேறு எந்த முன்னணி நடிகரும் தன் படம் ஓடவில்லை என்றால் இதுபோல் நஷ்ட ஈடு வழங்குவது இல்லை. ‘பாபா’, ‘குசேலன்’ போன்ற படங்களுக்கு நஷ்டஈடாக ரஜினி பெரும் தொகையை வழங்கியது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.

ஏற்கெனவே தனக்குக் கிடைத்த அனுபவங்களால் ‘கோச்சடையான்’ பட ரிலீஸின்போது ரஜினி முன்கூட்டியே தெளிவாக ‘‘தனக்கும் இப்படத்தின் விநியோகத்திற்கும் சம்பந்தமில்லை. என்னிடம் நஷ்டஈடு கேட்டு வரக்கூடாது என தெளிவாகக் கூறிவிட்டார். ஆனால் ரஜினி எதிர்பார்த்ததுபோலவே கோச்சடையானால் தலைவலி ஆரம்பமாகிவிட்டது. ஆனால், இது புது மாதிரியான புகார். அதாவது, கோச்சடையான் பட விநியோகம் தொடர்பாக லதா ரஜினிகாந்த் போட்ட சாட்சிக் கையெழுத்தால், இப்போது அவர்மீது 10 கோடி ரூபாய் ஏமாற்றுப் புகார் ஒன்றைத் தெரிவித்திருக்கிறார் தனியார் கம்பெனியைச் சேர்ந்த அபிர்சந்த் நாகர் என்பவர். அவர் மனுவின் சாராம்சம் இதுதான்...

‘‘நடிகர் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படம் கடந்த மே மாதம் வெளியானது. இந்த திரைப்படத்தின் தமிழக உரிமையை, அதன்  தயாரிப்பாளர் முரளி மனோகர் கடந்த ஏப்ரல் 25ம் தேதி எனது நிறுவனத்துக்கு அளித்தார். இதற்கான ஒப்பந்தத்தில் நானும், முரளி மனோகரும்  கையெழுத்திட்டோம். இதற்கு நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா உத்தரவாத கையெழுத்திட்டார். இந்த உரிமத்துக்கு உரிய தொகையை நான் முரளி  மனோகருக்கு அளித்தேன். ஒப்பந்ததை மீறி தமிழகத்தில் “கோச்சடையான்“ படத்தின் உரிமையை வேறு யாருக்கும் அளிக்கக் கூடாது. அதை மீறி, வேறு  யாருக்கும் உரிமை அளித்தால், நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

குறிப்பாக, விற்பனை தொகையில் 20 சதவீதமும், லாபத்தில் பங்கும் அளிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை மீறி முரளி மனோகர்  வேறு ஒரு நிறுவனத்துக்கு அனைத்து உரிமைகளையும் விற்றார். எனவே, நான் அவர்களிடம் எனக்குரிய நஷ்டஈட்டு தொகையை கேட்டபோது, லதா  ரஜினிகாந்தும், முரளி மனோகரும் என்னிடம் படம் வெளியானதும் அந்த தொகையை தருவதாக உறுதி அளித்தனர். நான், அவர்கள் மீது வைத்திருந்த  நம்பிக்கையின் அடிப்படையில் திரைப்படத்தை வெளியிட அனுமதி அளித்தேன். ஆனால், படம் வெளியாகி ஓடி பல மாதங்களுக்கு பின்னரும், அவர்கள் எனக்கு  தரவேண்டிய ரூ.10.2 கோடியை கொடுக்கவில்லை. நான், எனது பணத்தை பலமுறை அவர்களிடம் கேட்டும், அவர்கள் தராமல் இழுத்தடித்து வருகின்றனர்.  எனவே, அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும்.’’ என்று புகார் கொடுத்திருக்கிறார்.

‘லிங்கா’ பட இசைவெளியீட்டின்போது ரஜினி, ‘‘என் பிள்ளைகள் பணம் சம்பாதிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. நான் சேர்த்து வைத்திருக்கும் சொத்தை வீணாக்காமல் இருந்தால் போதும்!’’ என பகிரங்கமாக தன் மகள்கள் சௌந்தர்யா, ஐஸ்வர்யாவுக்கு அறிவுரை கூறினார். இதோ ரஜினி சொன்னதன் அர்த்தம் இப்போது விளங்கியிருக்கும்.

Rajini, Rajinikanth, Kochadaiyaan, Lingaa, Rajini issue, Rajini Money Problem, Soundarya Ashwin, Iswarya Dhanush, Ladha Rajini, Super Star, Baba, Kuselan

Samantha Latest Photos

    

Samantha, Samantha Ruth Prabhu, Kaththi, Anjaan, 10 Endrathukulla, VTV, Vinnai Thandi Varuvaya, Samantha hot photos, Samantha Cute Photos, Samantha Latest Photos, Actress Samantha Latest Photos