Pages

Saturday, November 29, 2014

காவியத்தலைவன் விமர்சனம் Kaaviya Thalaivan Review

வெயில், அங்காடித்தெரு, அரவான் என வித்தியாசமான படங்களைக் கொடுத்துவரும் வசந்த பாலனின் அடுத்த படைப்பு ‘காவியத்தலைவன்’. மேடை நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் எந்தளவுக்கு இருக்கிறது?

சுதந்திர இந்தியாவின் முந்தைய காலகட்டத்தில் இப்படத்தின் கதை பயணிக்கிறது. நாசர் பெரிய நாடகக் கம்பெனியை நடத்தி வருகிறார். அதில் சித்தார்த்தும், ப்ரித்விராஜும் முதன்மை நடிகர்களாக இருக்கிறார்கள். இரண்டு பேரும் திறமைசாலிகளாக இருந்தாலும், ப்ரித்விராஜ் கொஞ்சம் பொறாமை குணம் கொண்டவர். இதனால், சித்தார்த்துக்குக் கிடைக்கும் பேரையும், புகழையும் கண்டு மனம் வெதும்புகிறார். அதற்காக ப்ரித்விராஜ் செய்யும் ஒரு காரியம் அந்த நாடகக் கம்பெனியையே சின்னா பின்னமாக்குகிறது. அதை வெண்திரையில் கண்டுகளியுஙகள்.

காமெடி, ஹாரர், குத்துப்பாட்டு, டாஸ்மாக் காட்சிகள் என வியாபார நோக்கத்தோடு படங்கள் வந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் இப்படியொரு கலைப்படைப்பைக் கொடுத்ததற்காக இயக்குனருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் கோடி நன்றிகள்! கலைப்படைப்பு என்பதற்காக போரடிக்கும் என நினைத்துவிடாதீர்கள். இப்படத்திலும் நட்பு, பாசம், காதல், பகை, மோதல், நாட்டுப்பற்று, நகைச்சுவை என எல்லா கலவையும் இருக்கிறது.

படத்தின் ஹீரோ ரஹ்மான்தான். பாடல்களும் சரி... பின்னணி இசையும் சரி... ஆஸ்கர் தரம்! அதேபோல் ஒளிப்பதிவு, எடிட்டிங், சவுன்ட் எஃபெக்ட், செட், காஸ்ட்யூம், மேக்அப் என எல்லாமே படத்திற்கு பலம். நடிகர்களின் பங்களிப்பும் அற்புதமாக இருக்கிறது. மைனஸ் என்று பார்த்தால் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டும் படம் கொஞ்சம் தொய்வடைகிறது. ஆனால், இத்தனை சிறப்பம்சங்கள் இருப்பதால் அதை தாராளமாக பொறுத்துக் கொள்ளலாம்.

அந்தக்கால மேடை நாடகங்களை பார்க்கும் பாக்கியம் இதுவரை நமக்குக் கிடைத்ததில்லை. அதை 120 ரூபாயில் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் வசந்த பாலன். கண்டிப்பாக தியேட்டருக்குச் சென்று ரசியுங்கள்.

ரேட்டிங் : 3.25 / 5

Director : Vasantha Balan
Production : Y Not Studios, Radian Medias
Music : A.R.Rahman
Camera : Neerav Sha
Actors : Siddarth, Prithvi Raj, Nasar, Vedika, Anaika, Thampi Ramaiah

Kaaviya Thalaivan, Kaviya Thalaivan, Kaaviya Thalaivan Movie Review, Veyil, Angadi Theru, Aravan

No comments:

Post a Comment